Pages

Wednesday, January 22, 2014

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

ஜனவரி 22, 2014,
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்ட ரீதியாக உதவி புரிய கூடிய மாநில ஒருங்கிணைப்புக் குழுவை முறையாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,அரசு துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.


Thanks to
 

No comments:

Post a Comment