Pages

Sunday, April 20, 2014

மாற்று திறனாளிகளுக்கு தொந்தரவு கொடுத்தவருக்கு வினோத தண்டனை

சிகாகோ, 15 April 2014
அமெரிக்காவில் மாற்று திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக, 62 வயது முதியவர் ஒருவருக்கு ""நான் எளியவர்களை துன்புறுத்துபவன்'' என்று எழுதப்பட்ட பலகையை தாங்கிப் பிடித்தபடி பொது இடத்தில் 5 மணி நேரம் உட்கார வைத்து அந்நாட்டு நீதிமன்றம் வினோத தண்டனையை வழங்கியது.

மேலும், ""எட்மண்ட் ஆவிவ், 15 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உளவியல் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்ல வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவிட்டார். எட்மண்ட் தனது அண்டை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் அவரது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் 15 ஆண்டுகளாக தொந்தரவு கொடுத்து வந்ததாக வந்த புகாரையடுத்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவருக்கு பொது இடத்தில் நூதன முறையில் தண்டனையை நிறைவேற்றியதற்கு பொதுமக்களும், பெண்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Thanks to

No comments:

Post a Comment