Pages

Friday, January 23, 2015

மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் பலாத்காரம்: அரசுக்கு நோட்டீஸ்!

23.01.2014, சென்னை:
மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணிரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வீரபத்திரப்பா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "காது கேட்காத, வாய்பேச முடியாத என்னுடைய 16 வயது மகளை கடந்த 25 ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ளது.

அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்யாமல் சிகிச்சை வழங்க முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதையடுத்து, உள்ளூர் போலீசில் புகார் செய்தும், உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இச்சம்பவத்தில் தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து, இது குறித்து பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணிரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment