Pages

Tuesday, February 17, 2015

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: 
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் எதிரே, கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். வங்கி கடன் உதவி கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய தொகை வழங்காமல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலை கழிப்பதை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண <உதவித் தொகை விண்ணப்பத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

No comments:

Post a Comment