Pages

Wednesday, May 27, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விளையாட்டு மையங்கள்

நாசிக்,25 May 2015
நாடு முழுவதும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக, 5 தேசிய விளையாட்டு மையங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் அமைச்சர் இதைத் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிப்பதற்காகவும் இந்த விளையாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment