Pages

Monday, May 11, 2015

ஈரோட்டில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

09.05.2015, ஈரோடு 
முத்துக்குமாரசாமி வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 28). இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது ராஜேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment