Pages

Wednesday, September 23, 2015

DEAF கீதா டில்லியில் அடைக்கலம்?

15.09.2015, புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள, மாற்றுத்திறனாளியான இந்தியப் பெண் கீதாவிற்கு, டில்லியில், அடைக்கலம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செய்துள்ளது.

இதுகுறித்து, இந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மையத்தில், கீதா, 23, தங்க வைக்கப்படுவார். காது கேளாத, வாய் பேச இயலாத கீதாவிற்கு, சிகிச்சை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி கோரி, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய எல்லைக் கிராமம் ஒன்றில் வசித்த கீதா, 4 வயதில், தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். அவரை, அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, பராமரித்து வருவதுடன், பெற்றோரை கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய தரப்பில், வெளியுறவு துறை அமைச்சகம், கீதாவை, அவரது பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு குடும்பங்கள், கீதாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. 

No comments:

Post a Comment