Pages

Wednesday, October 21, 2015

அக். 30-இல் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர், 20 October 2015
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அக்டோபர் 30-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

முகாமில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

No comments:

Post a Comment