Pages

Saturday, January 30, 2016

முட்டுக்காடு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் 207 ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வேளச்சேரி, ஜன. 29–

முட்டுக்காட்டில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் பள்ளி உள்ளது. இங்கு 207 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நிதி இல்லாததால் அவர்களை பணிக்கு வர வேண்டாம் என்று நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 207 ஊழியர்களும், மாற்று திறனாளிகள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment