Pages

Wednesday, March 2, 2016

133 மாற்றுத் திறனாளிகளுக்கு பிளஸ் 2 தேர்வு எழுத சலுகை

02.03.2016, கடலுார்:கடலுார் மண்டலத்தில், 68 பார்வையற்றோர் உள்ளிட்ட 133 மாற்றுத் திறனாளிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, வரும் 4ம் தேதி துவங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில், கடலுார் கல்வி மண்டலத்தில் பார்வையற்றோர், காது கேளாதோர், நரம்பு தளர்ச்சி, மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத் திறனாளிகள் என, மொத்தம் 133 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் 65, விழுப்புரத்தில் 35, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 33 பேர் உள்ளனர்.

மண்டலத்தில் பார்வையற்ற 68 பேர் மற்றும் நரம்பு தளர்ச்சி காரணமாக 7 பேருக்கும் இவர்கள் சொல்ல, சொல்ல தேர்வு எழுத 'ஸ்கிரைபர்' நியமிக்கப்பட்டுள்ளனர்.

காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளி ஆகியோர் தேர்வு எழுத ஒரு மணி நேரம் கூடுதலாகவும், அவர்களில் சிலருக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் இருந்தும், பிழைகளில் இருந்தும் விலக்கு அளித்து கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment