Pages

Sunday, April 10, 2016

அரசியலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வேண்டி கோரிக்கை


09.04.2016
அரசியலில் மகளிருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்துவகை மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பின் 16வது மாநில மாநாடு சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மகளிருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் 3 சதவிகிதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment