Pages

Friday, July 29, 2016

விலையில்லா தையல் இயந்திரம்: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

27.07.2016, மதுரை
தையல் பயிற்சி பெற்ற பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உள்பட்ட தையல் பயிற்சி பெற்ற பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரம் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.

தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆக.8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment