Pages

Tuesday, November 8, 2016

ஆசிரியர் அடித்ததால் செவித்திறன் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவன்!


கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவனை, ஆசிரியர் அடித்ததால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் சோனங்குப்பத்தை சேர்ந்த பிரவீனா என்பவரின் மகனான பிரதாப், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். சீருடை அணியாமல் கடந்த 3ம் தேதி பள்ளிக்கு சென்ற பிரதாப்பை, உடற்கல்வி ஆசிரியர் பாட்ஷா கன்னத்தில் அடித்துள்ளார்.

இதில் மயக்கம் அடைந்த மாணவர், பின்னர் காது கேட்காதது குறித்து தனது தாய் பிரவினாவிடம் தெரிவித்துள்ளார். காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் பிரசோதனை மேற்கொண்டதில், பிரதாப்பின் காது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80 சதவிகிதம் காதுகேட்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவினா, தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment