Pages

Tuesday, June 20, 2017

சசிகலா கொடுத்த ரூ.10 லட்சம் செக் பவுன்ஸ் ; காதுகேளாத குழந்தைகளுக்கான பொருட்களும் பறிமுதல்

20.06.2017
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதார் பள்ளிக்கு ஜெ.வின் தோழி சசிகலா கொடுத்த ரூ.10 லட்சம் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. மேலும், காது கேட்காத குழந்தைகளுக்கு அவர் வழங்கிய கருவிகளுக்கான பணத்தையும் செலுத்தாததால், அந்த கருவிகள் குழந்தைகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பின், கடந்த ஜனவரி 17ம் தேதி அவர் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆர் சிலை ஒன்றை திறந்து வைத்த அவர், அங்குள்ள காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு உதவுவதாக கூறி ரூ.10 லட்சத்திற்கான செக் ஒன்றை வழங்கினார். மேலும், அங்குள்ள 240 குழந்தைகளுக்கும் ரூ.19 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவிகளையும் அவர் வழங்கினார்.

இந்த செக்கை, அந்த பள்ளியை நடத்தி வரும் லதா ராஜேந்திரன் வங்கியில் டெபாசிட் செய்தார். ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லை என சசிகலா கொடுத்த செக் திரும்பி வந்து விட்டது. இதனால் லதா ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். அதோடு, சசிகலா வழங்கிய காது கேட்கும் கருவிகளுக்கு உரிய பணத்தையும் சசிகலா தரப்பு தரவில்லை எனத் தெரிகிறது. அந்த கருவிகளுக்கான பணத்தை பெற எவ்வளவு முயன்றும் பெற முடியாததால் வெறுத்துப்பொன அந்த நிறுவனம், காதுகேளாதோர் பள்ளிக்கு வந்து அந்த குழந்தைகளிடம் இருந்து அந்த கருவிகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றுவிட்டது.

இதனால் அந்த பள்ளியை நிர்வகிக்கும் லதா ராஜேந்திரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

No comments:

Post a Comment