Pages

Monday, October 28, 2024

வீட்டில் தனியாக இருந்த காது கேளாத சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!



26.10.2024 உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் காது கேளாத 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி சிறுமி வீட்டில் இருந்த போது, 42 வயதுடைய மனோகர் ராய்க்வார் என்பவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து பதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மனோகர் ராய்க்வார் என்பவரை தேடி வந்தனர். மேலும் இவரை பற்றி தகவல் கொடுக்கும் நபருக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தலைமறைவாக இருந்த மனோகர் ராய்க்வாரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment