Pages

Sunday, December 15, 2024

செவித்திறன் இழந்த ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய சன் டி.வி. ரூ.1 கோடி நிதியுதவி



20.11.20214 
செவித்திறன் இழந்த மற்றும் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக சன் டி.வி. குழுமம் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக மெட்ராஸ் காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சன் டி.வி. ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரனிடம் சன் டி.வி. குழுமம் சார்பில், மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாகிகள் ஆனந்த் குமார், ஜெகநாதன், இந்திரா காமேஸ்வரன், உமா மகேஸ்வரி கலந்துகொண்டனர். இந்த நிதியின் மூலம் பிறவியிலேயே செவித்திறன் இழந்த மற்றும் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட 11 ஏழைக் குழந்தைகளுக்கு காக்லியர் இம்ப்லாண்ட், ஆடிட்டரி ப்ரைன் ஸ்டெம் இம்ப்லாண்ட், போன் பிரிட்ஜ் இம்ப்லாண்ட் உள்ளிட்ட நவீன அறுவை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று மெட்ராஸ் காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சன் டி.வி.யும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment