.jpg)
05.07.2025 திருப்பூர் : திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மத்திய, மாநில அரசு திட்டங்களில் பல்வேறு நல உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் இரண்டும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, ஸ்கூட்டர் பெறும் பயனாளிகள் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், தகுதியான பயனாளிக்கு ஒதுக்கிய ஸ்கூட்டருக்கான, ஆர்.சி., புக்கை மட்டும் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரை மற்றொரு நபருக்கு வழங்கி முறைகேடு நடந்தது.
புகார் அதிகரித்ததால், சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் குழுவினர் வந்து, ஆய்வு நடத்தி சென்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் அல்லது பணிமாற்றம் குறித்து முடிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகளும், இயல்பான மனிதர்களை போல் இயங்க வேண்டும்; தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவி செய்கின்றன.
தகுதியான பயனாளிகளை கண்டறிந்து, தடையின்றி உதவி கிடைப்பதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாறாக, சிபாரிசு என்ற பெயரில், பயனாளிகள் பட்டியலில் இல்லாத நபருக்கு உதவி வழங்க கூடாது; பதிவு மூப்பு அடிப்படையில், நல உதவிகள் வழங்குவதை புதிய கலெக்டர் உறுதி செய்யவேண்டும்,' என்றனர்.

No comments:
Post a Comment