ஓசூர், ஆக.12
தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்ட மைப்பின் மாநில மாநாடு, 40வது ஆண்டு ரூபி ஜூப்ளி விழா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்க 15வது ஆண்டு விழா ஒசூர் மாநகராட்சி மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப்பில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனிசாமி, பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட மாநிலத்தின் 38 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் 100க்கும் ன காது கேளாத, வாய் பேச அதிகமான இயலாத மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளான காது கேளா தோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் முழுமையாக சென்றடையவில்லை.
எனவே முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 ஆக இருந்ததை ரூ.1,500 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.
இதனை வரவேற்றுள்ள நிலையில் இந்த உதவித்தொகை சிறு நிபந்தனைகளின் காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பயனடையும் நிலை உள்ளதால் அனைவரும் பயனடையும் வகையில் நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை தொடர்ந்து நிருபர்களிடம் தமிழ் நாடு நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு கூறியதாவது, காது கேளாதவர்களுக்கு இப்போது, அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை ரூ,1,500 யாருக்கும் சென்றடையவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத சிறு, சிறு நிபந்தனைகளால் பயனடைய இயலாத நிலை உள்ளது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,500 உதவித்தொகை அனைத்து காது கேளாதவர்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதுபோல், தமிழகத்திலும் உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment