Pages

Monday, August 4, 2025

இந்திய சைகை மொழியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மத்திய அமைச்சருக்கு தில்லி எம்பி கடிதம்



23.7.2025
அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் நிகழ்நேர இந்திய சைகை மொழியை விளக்கத்தை அறிமுகப்படுத்தக் கோரி சாந்தினி சௌக் தொகுதி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் நிகழ்நேர இந்திய சைகை மொழியை (ஐஎஸ்எல்) விளக்கத்தை அறிமுகப்படுத்தக் கோரி சாந்தினி சௌக் தொகுதி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரவீன் கண்டேல்வால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு நாடாளுமன்றத்தை அணுகக்கூடியதாக மாற்றுவது 'மக்கள் பங்கேற்பு ஜனநாயகம்' என்ற பிரதமரின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் நீட்டிப்பாகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்திய மக்கள் தொகையில் தோராயமாக 2.21 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக வாழ்கின்றனர். அவர்களில் 5.76 சதவீதம் பேர் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள்.

உலக சுகாதார அமைப்பு, தேசிய மாதிரி கணக்கெடுப்பின் சமீபத்திய மதிப்பீடுகள், கிட்டத்தட்ட 63 மில்லியன் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க செவித்திறன் இழப்பை அனுபவிப்பதாகக் கூறுகின்றன. அவர்களில் பலருக்கு, இந்திய சைகை மொழி முதன்மையான தொடர்பு ஊடகமாகும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உரைகள், விவாதங்கள், அரசமைப்பு பதவி வகிப்பவர்களின் சிறப்பு உரைகள் மற்றும் அதிகாரபூர்வ ஊடக சந்திப்புகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் ஐஎஸ்எல் விளக்கத்துடன் இருக்க வேண்டும். இந்த விளக்கம் உயர்தரமாகவும், தெளிவாகத் தெரியும் வகையிலும், சன்சத் டிவி, நாடாளுமன்ற வலைதளம் மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் தளங்களில் நிகழ்நேரத்தில் ஒளிபரப்பப்பட வேண்டும்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது (ஐஎஸ்எல்) விளக்கத்தை செயல்படுத்துவது, மிகவும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான அரசின் தொடர்ச்சியான பணிகளை வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment