Pages

Thursday, September 11, 2025

மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும்!



08.09.2025 
திருப்பத்தூர் காது கேளாதோர் நலச் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்!!

திருப்பத்தூர் செப் 09. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காது கேளா தோர் நலச் சங்கம் 20 வது ஆண்டு விழா மற்றும் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு 10வது மாநில மாநாடு தனியார் மஹாலில் நடைபெற்றது. காது கேளாதோர் நல சங்க தலைவர் தீபக் சிவகங்கை மாவட்ட செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கௌரவ தலைவரும், ராணி வேலு நாச்சியார் அறக்கட்டளை தலைவருமான கோபால்ராஜன் வரவேற்றார்.

விழாவில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் பழனிச்சாமி, பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், சட்ட ஆலோசகர் துரைபாண்டியன், முன்னாள் தலைவர் பழனியப்பன், சேர்மன் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஆதித்யா சேதுபதி, சிவகங்கை சமஸ்தானம் மாவட்ட காதுகேளாதோர் நல சங்கம் துணைத்தலைவர் அமானுல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டார்.
 
மாதாந்திர உதவித் தொகை 6000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை பாகுபாடு இன்றி வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

உள்ளிட்ட 24 கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் பொதுச் செயலாளர் காதர் சுல்தான் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட கேளாதோர் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


No comments:

Post a Comment