28.09.2025
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 9 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கரூரில் 1 3/4 வயது குழந்தையான துருவ் விஷ்ணுவை அவரது பாட்டின் கரூரில் விஜய்
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் தாய்க்கு காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது மாற்றுத்திறனாளி. தன் குழந்தையை பறிகொடுத்த வேதனையில் அந்த தாய் கதறி அழ கூட முடியாமல் உறைந்து போய் நிற்கும் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உருக்குலைய வைத்துள்ளது. மேலும் அழக்கூட முடியாமல் அந்த தாய் வேதனையில் தவிக்கும் காட்சி அனைவரது நெஞ்சையும் உலுக்கியுள்ளது.
No comments:
Post a Comment