Pages

Saturday, December 13, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைப்பேசி வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளிடம் நேர்காணல்



12.12.2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைப்பேசி வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளிடம் வியாழக்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச முடியாத, செவித்திறன் குறைவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கைப்பேசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கைப்பேசி பெற விண்ணப்பித்த 440 மாற்றுத்திறனாளிகள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

அவ்வாறு அழைக்கப்பட்டவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. இதில் திட்ட அலுவலர் (தமிழக ஊரக வாழ்வாதார திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment