Pages

Thursday, December 25, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவி: திருவள்ளூர் ஆட்சியர் வழங்கினார்



23.12.2025
திருவள்ளூர்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் 32 பேருக்கு ரூ.16.42 லட்சத்தில் காதொலிக் கருவிகளை ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 442 மனுக்களைப் பெற்று, தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் காதொலி கருவிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதை தொடர்ந்து தனியார் நிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு 500 காதொலிக் கருவிகள் ரூ.16,42,500 லட்சத்தில் பெறப்பட்டு அதனை வழங்கும் அடையாளமாக சிறப்புப்பள்ளிகளைச் சேர்ந்த 32 மாணவர்களுக்கு 64 காதொலி கருவிகளை வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment