Pages

Friday, September 25, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி: கலெக்டர்



மதுரை : ''மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மேம்பாட்டிற்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும்,'' என, மதுரையில் ஊரக வளர்ச்சி மற்றும் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வழங்கும் திறன் பயிற்சி திட்டங்களை ஆன்லைன் மூலம் துவக்கி கலெக்டர் வினய் தெரிவித்தார்.
நிறுவனம் சார்பில் கள்ளந்திரியில் பால்பண்ணை, மண்புழு உரம் தயாரிப்பு, ஊமச்சிகுளத்தில் ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. கலெக்டர் பேசுகையில், ''பயிற்சி திட்டங்கள் பயனாளிகளின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.18 முதல் 45 வயதிற்குட்பட்ட யாரும் இந்நிறுவனத்தில் பயிற்சியில் சேரலாம். உணவுடன் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். மதுரையில் 33 ஆண்டுகளில் இந்நிறுவனம் 24,204 பேருக்கு பயிற்சியளித்துள்ளது.


No comments:

Post a Comment