Pages

Thursday, May 26, 2016

சைக்கிள் கடையில் வேலைபார்த்து கொண்டே படித்த காதுகேளாத மாணவர் மாநிலத்தில் இரண்டாமிடம்

26.05.2016
தனது மாமாவின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்துத் தேர்வெழுதிய காது கேளாத தருமபுரி மாணவர் மாரியப்பன், காது கேளாத - வாய்ப் பேச இயலாத மாணவர்களில் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
தருமபுரியை அடுத்த பேடரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தேர்வெழுதிய இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 90, கணிதம்- 100, அறிவியல்- 90, சமூக அறிவியல்- 95. மொத்தம் 375.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கே.கலா கூறியதாவது: காது கேளாத மாரியப்பனுக்கு எங்கள் ஆசிரியர்கள் சைகையிலேயே பாடம் நடத்திக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எங்களுக்கும் சைகை மொழி சுலபமானது. மாரியப்பனின் தந்தை இறந்து விட்டார். அவரது மாமா நாராயணனின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டுதான் படித்தார்.
பாடம் சொல்லித் தரும்போது சில நேரங்களில் தன்னுடைய இயலாமையை எண்ணிக் கண் கலங்கியிருக்கிறார் என்றார் கலா.
தமிழாசிரியை உதவியுடன் மாணவர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மகிழ்ச்சியாக இருக்கிறது; டாக்டர் ஆக வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.

No comments:

Post a Comment