FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Thursday, February 26, 2015

DEAF மாற்றுத்திறனாளி ரயில் மோதி பலி

20.02.2015, கண்டமங்கலம்: 
கண்டமங்கலம் அருகே மாற்றுத்திறனாளி ரயில் மோதி இறந்தார். கண்டமங்கலம் அடுத்த பண்ணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு(33). இவர், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்களில் மூட்டை சுமக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், நேற்று காலை சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரியை நோக்கிச் சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென, இவர் மீது மோதியது. இதில், இரண்டு கால்களும் துண்டான நிலையில் உயிருக்கு போராடியவரை மக்கள் மீட்டனர். உடன் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment