FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, October 29, 2021

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் காதுகேளாத பேசாத வாலிபர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அக்ராகார நாட்டா மங்கலம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த கோடி மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் கொத்தனார் வேலை செய்யும் கூலி தொழிலாளியான இவர் வாய்பேச முடியாது, காது, கேட்காது ஊமையாக உள்ள மணிகண்டன் 3-ம் தேதி இரவு குள்ளம்பட்டி அருகே தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அரசு மதுபான கடையிலிருந்து மதுபாட்டில் வாங்கிகொண்டு அவ்வழியாக குளிப்பட்டி பள்ளக்காடு அருணாசலம், திருமலை ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்களிடம் லிப்ட் கேட்டு சாடை செய்த மணிகண்டனை அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது குள்ளம்பட்டி அருகே உள்ள ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர்கள், மது அருந்த மரத்துக்கு அடியில் அமர்ந்துள்ளனர். அதற்கு பின்னர் மணிகண்டனை ஓரினசேர்க்கைக்கு இருவரும் அழைத்துள்ளனர். ஆனால் மறுத்ததால் மணிகண்டன் மேல் போட்டிருந்த துணிகளை அவிழ்த்துவிட்டு சில்மிஷத்தில் ஈடுபடும் போது மணிகண்டன் ஒத்துழைக்காததால், ஆவேசமடைந்த அருணாச்சலமும், திருமலையும் மதுபாட்டில், கல்லால் குத்தி தலையிலும் வயிற்றிலும் அடித்து நிர்வாண நிலையில் கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் மூலமாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை வலைவீசி தேடிவருகின்றனர். போலீஸார் தேடி வரும் திருமலை கடந்த ஆண்டு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment