FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, December 4, 2020

தூத்துக்குடி அருகே இன்னும் சில நாளில் திருமணம் செய்ய இருந்த காது கேளாத பெண் ஒருவர் வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

03.12.2020
தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. கடை வைத்து வியாபாரம் செய்து வரும் இவருக்கு 3 குழந்தைகள். சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23) என்ற மகள்களும் இசக்கி தாஸ் (21)

. இதில் இரண்டாவது மகளான விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை சந்தன செல்வி எழுந்து அடுப்படிக்கு சென்ற போது அங்கு விஜயலட்சுமி புடவையில் தூக்குமாட்டி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான சந்தனலெட்சுமி அலறியடித்து வெளியே வந்து அழ ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அங்கு கூடிய அக்கம்ப்பக்கத்தினர் விஜயலட்சுமியின் உடலை கீழே இறக்கியுள்ளனர். மேலும் போலீஸாருக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை குறித்து தகவலறிந்த போலிசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார். தனக்கு காது கேளாத பிரச்சனை இருந்ததால் திருமணம் வேண்டாம் என விஜயலட்சுமி சொல்லி வந்ததாகவும், ஆனால் பெற்றோரும் சகோதர சகோதரியும் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நெருங்கிய நிலையில் விஜயலட்சுமி இந்த முடிவை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.



No comments:

Post a Comment