12.09.2025
கோயம்பேடு பேருந்து பணிமனையிலிருந்து திருடுபோன அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மீட்கப்பட்டது. அந்த பேருந்தை ஓட்டிச் சென்ற ஒடிஸா மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சென்னை-திருப்பதி செல்லும் பேருந்து கோயம்பேடு பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தை எடுப்பதற்காக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வியாழக்கிழமை காலை அங்கு சென்றபோது, நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பேருந்தை காணவில்லை.
இதுகுறித்து கோயம்பேடு பேருந்து பணிமனை கிளையின் மேலாளர் ராம்சிங் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது, பேருந்தின் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து இருக்கும் இடத்தை ஆய்வுசெய்தபோது, ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற கோயம்பேடு போலீஸார், நெல்லூர் காவல்துறை உதவியுடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நெல்லூர் அத்மகூர் என்ற இடத்திலிருந்து பேருந்தை மீட்டனர். மேலும், பேருந்தை திருடிச் சென்ற ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஞானசஞ்சன் சாஹூ (24) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment