FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, September 28, 2025

TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை - தேர்வு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது



தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் "TN Rights" திட்டத்தில் பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9 பதவிகளுக்கு 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தேர்வில்லாமல் தமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா? TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நல்ல சம்பளத்தில் ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல், உளவியல், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர், பிசியோதெரபிஸ்ட், சமூகப் பணி, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

TN Rights திட்ட வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் மூலம் உலக வங்கியின் நிதி உதவியுடன் TN Rights திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாவட்ட திட்ட செயல்பாட்டு அலகு (DPIU) மற்றும் துணை பிரிவு மையம் (SDC) ஆகிய பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் 9 பதவிகளில் மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பதவியின் பெயர்                                                 காலிப்பணியிடங்கள்
பிளாக் ஒருங்கிணைப்பாளர்                                                 250
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர்                                 94
உளவியலாளர் / ஆலோசகர்                                                     94
சிறப்புக் கல்வியாளர்                                                                 94
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்                                                       94
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர்                        94
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர்                                                94
பல்நோக்கு பணியாளர் (தூய்மை மற்றும் பாதுகாப்பு) 188
அலுவலக உதவியாளர் (SDC)                                                     94
மொத்தம்                                                                                         1096

தகுதிகள்
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மறுவாழ்வு அறிவியல், பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, சிறப்பு கல்வி, உளவியல், சமூகப் பணி மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவிக்கு மறுவாழ்வு சாரந்த படிப்பு, பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, சிறப்பு கல்வி, உளவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு அனுபவம் தேவை.

உளவியலாளர் / ஆலோசகர் பதவிக்கு உளவியலில் முதுகலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் தேவை.

சிறப்புக் கல்வியாளர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 3-5 ஆண்டு அனுபவம் தேவை. மறுவாழ்வு கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு அதற்கான இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3-5 ஆண்டு அனுபவம் தேவை.
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஆப்டோமெட்ரி-யில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3-5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

பல்நோக்கு பணியாளர் பதவிக்கு 10 அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
உளவியலாளர் / ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.35,000
சிறப்புக் கல்வியாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு மாதம் ரூ. 35,000
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவிக்கு மாதம் ரூ15,000
பல்நோக்கு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.12,000
அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.12,000

நேர்காணல் மூலம் தேர்வு
தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தில் பணியாற்ற விரும்புகிறவர்கள் எழுத்துத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுச் செய்யப்பட்டவர்கள் முதலில் 11 மாதங்கள் பணியமர்த்தப்படுவார்கள். தேவை மற்றும் திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
1000 அதிகமான உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnrightsjobs.tnmhr.com/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான இணைப்பை https://www.scd.tn.gov.in/ என்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணையதளம் வழியாகவும் பெறலாம். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 24-ம் தேதி வெளியான நிலையில், அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : Continue என்பதை கிளிக் செய்யவும். "Proceed to Online Application" என்பதை கிளிக் செய்யவும்.
படி 3 : மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி கொண்டு பதிவு செய்யவும்.
படி 4 : ஆன்லைன் இணையதளத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
படி 5 : விண்ணப்பத்தை சரிபார்த்து Submit கொடுக்கவும்.

முக்கிய நாட்கள்

விவரம்                                                         தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்             14.10.2025
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
தமிழ்நாடு அரசு துறையில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். டிஎன் ரைட்ஸ் திட்டத்தில் உள்ள பணி வாய்ப்பிற்கு மாநில அளவில் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


No comments:

Post a Comment