FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, May 8, 2014

வெற்றிக்கான தடை மனம் அல்ல; பணம்

பயிற்சியின்போது (இடமிருந்து) குருநாதன், படைத்தலைவன், அந்தோனி, பயிற்சியாளர் ரஞ்சித். பூங்கொடி (உள்படம்).
07.05.2014
"தேசத்துக்காக விளையாடி என்ன பயனைப் பெற்றீர்கள். விளையாட்டை விடுத்து வேறு ஏதேனும் செய்யுங்கள்' என்று வீரர் ஒருவரிடம் சக மனிதர் கூறினால் வெற்றி வீரரை நாடு எப்படி பெறும். அந்த சூழலை மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர்களான எஸ்.குருநாதன், எம்.டி.பூங்கொடி, பி.படைத்தலைவன், கே.ஜே. அந்தோனி ஆகியோர் எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், வெற்றி வேட்கை மட்டும் அவர்களிடம் இருந்து தணியவில்லை.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியை மனதின் ஆழத்தில் இவர்கள் பதிய வைத்துக் கொண்டார்கள். அதனால், துனீஷியாவில் அடுத்த
மாதம் நடைபெறும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான வழிகளைப் பற்றி ஆராய்ந்து அதற்கான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

முதலில் வெற்றி பெற வேண்டியது இந்தக் களம், பிறகுதான் விளையாட்டுக் களம்; சக வீரரை மட்டுமல்ல, புறச்சூழ்நிலையையும் வெல்வதே உண்மையான வெற்றி என்று இவர்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.

ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்த வீரர்கள் பாராலிம்பிக்கில் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியின் முடிவு அத்துடன் முடிந்து விடுவதில்லை. அதில் பெறும் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, தென் கொரியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட தகுதி பெற முடியும். அதனால், துனீஷியா போட்டியில் கலந்து கொண்டு கண்டிப்பாக சிறப்பான பங்களிப்பை அளிப்போம்; ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் குருநாதன்.

இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். தேசிய அளவில் 2 தங்கம், 2 வெள்ளி உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளேன். ஆனால், இதுவரை அரசிடமிருந்து எவ்வித நிதியும் எனக்கு கிடைக்கவில்லை. பதக்கம் வெல்லும் சாதாரண வீரர்களைப் போல, மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு ரொக்கம் வழங்கப்படுவதில்லை. அதனால், விளையாட்டில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்தாலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளோம். இது எங்களின் அடுத்த போராட்டத்துக்கு பெரும் தடையாக உருவெடுத்து வருகிறது' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு கோடிகளில் செலவு செய்யப்படுகின்றன. எங்களைப் போன்ற வீரர்களையும் தனியார் நிறுவனங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துனீஷியா பயணத்துக்கான தொகையை ரசிகர்களிடம் இருந்தே பெறும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். அதற்கு பக்கபலமாக "யூத் லீட் இந்தியா' எனும் தொண்டு நிறுவன அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக், பொது இடங்களில் நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அந்த அமைப்பின் நிறுவனர் பிரசாந்த். அவருடன் பல இளைஞர்களும் இணைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் பேச வைத்த சச்சினைப் போல, பிஸ்டோரியஸ், ப்ளேக் லீபர் போன்ற வீரர்களை இந்தியாவிலிருந்து நாம் ஏன் உருவாக்கக் கூடாது?

பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கொண்டு வீரரின் வெற்றியைக் கை தட்டி கொண்டாடுவதில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலில் அவர்களை கை தூக்கி விடுவதிலும் ரசிகர்களின் பங்கு உள்ளது.

கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல; மற்ற விளையாட்டுகளுக்கும் நமது நேரத்தையும், பணத்தையும் விரயமாக்குவோம். துனீஷியாவில், தென் கொரியாவில் என பல நாடுகளிலும் நமது மூவர்ணக் கொடியை உயர்த்துவோம்.

இது தொடர்பாக குருநாதனை 94420-09980 என்ற எண்ணிலும், பிரசாந்தை 86430-50002 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சியின்போது (இடமிருந்து) குருநாதன், படைத்தலைவன், அந்தோனி, பயிற்சியாளர் ரஞ்சித்.

பூங்கொடி (உள்படம்).

Thanks to

No comments:

Post a Comment