FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, March 13, 2016

ஈரோட்டில் உள்ள போக்குவரத்துதுறை அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

12.03.2016, ஈரோடு
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மண்டல அலுவலகத்துக்கு 25–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், பஸ் பயண சலுகை அட்டை பெரிதாக இருப்பதாக கூறி பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி இம்தியாஸ் அகமது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘எங்களுக்கு வழங்கப்படும் பஸ் பயண சலுகை அட்டை மிகவும் பெரிதாக உள்ளது. இதை சட்டைப்பையில் வைத்து எடுத்துச்செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவதுபோல ஈரோடு மாவட்டத்திலும் அட்டைக்கு பதிலாக, இலவச பஸ் பயண சலுகை புத்தகம் வழங்கவேண்டும்’ என்றார்கள்.

அதற்கு அவர், ‘அடுத்த மாதம் முதல் பஸ் பயண சலுகை, புத்தக வடிவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


No comments:

Post a Comment