FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, October 8, 2016

தீக்காயமடைந்த காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறுவன் 'முரண்டு': உண்மை தெரியாமல் போலீஸ் தவிப்பு

08.10.2016, கொண்டலாம்பட்டி:    தீக்காயமடைந்த சிறுவன், சரிவர பதிலளிக்காமல், முரண்டு பிடிப்பதால், உண்மையை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, ராஜா என்பவரின் மகன் அபிஷேக், 16. பிறவியிலேயே, வாய்பேச இயலாத சிறுவன், அஞ்செட்டியில் உள்ள, பிரத்யேக பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அவன், கொண்டலாம்பட்டி, பாட்டப்பன் நகரில் உள்ள சித்தப்பா முத்துவின் வீட்டுக்கு, சில நாட்களுக்கு முன் வந்தான். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில், இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சேலம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனிடம், காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறப்பாசிரியர்கள் சகாயராஜ், ஜெபஸ்டின் ராஜா, சிறப்பு நல மருத்துவர் பிரமிளா ராஜ்குமார் ஆகியோர், தனித்தனியே, அடுத்தடுத்து விசாரித்தனர். அவர்களிடம், மாறி, மாறி முரண்பாடான தகவலை சிறுவன் தெரிவித்தான். இதனால், தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்ற உண்மையை கண்டறிய முடியவில்லை. இதற்கு மன அழுத்தம் அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற ரீதியில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன செய்வதென தெரியாமல், போலீசார் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment