FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, August 1, 2017

அட கொடுமையே! காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் 5 பதக்கம் குவித்து நாடு திரும்பியவர்களை வரவேற்க ஆளில்லை

01.08.2017
டெல்லி: காதுகேளாதோருக்கான டெஃப்லிம்பிக் போட்டியில் 5 பதக்கங்களை குவித்த வீரர்களை வரவேற்க ஆளில்லாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காது கேளாதோருக்கான டெஃப்லிம்பிக் போட்டி துருக்கியில் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிகள் கடந்த 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 46 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

5 பதக்கங்களை குவித்த இந்தியா
இதில் பளுத்தூக்குதல் உட்பட தங்கம் உள்ளிட்ட 5 பதக்கங்களை இந்திய வீரர்கள் குவித்தனர். இந்நிலையில் வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.

வரவேற்க ஆளில்லை
டெல்லி விமான நிலையத்துக்கு வந்த அவர்களை வரவேற்க அரசு சார்பில் யாரும் விமான நிலையத்துக்கு செல்லவில்லை. இதனால் வீரர்கள் பெரும் அதிருப்தியடைந்தனர்.

வீரர்கள் போராட்டம்
இதனை கண்டிக்கும் விதமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லப் போவதில்லை என்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்முறையாக அதிக பதக்கங்கள்

டெஃப்லிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்திருப்பது இதுவே முதல் முறை என்று டெஃப்லிம்பிக் அசோஸியேஷன் நிர்வாகி ஷா தெரிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பும் வீரர்களுக்கு மட்டும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

வாழ்த்து தெரிவிக்காத அமைச்சர்
ஆனால் 5 பதக்கங்ளை வென்று நாடு திரும்பியுள்ள காதுகேளாத வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் வாழ்த்து கூட தெரிவிக்காமல் இருப்பது வீரர்களுக்கு மிகுந்த மன உளைச்சளை தருவதாகவும் ஷா கூறினார்.

No comments:

Post a Comment