FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Saturday, March 16, 2019

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

14.03.2019
நாமக்கல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. நாமக்கல் தொகுதியில் 13 லட்சத்து 77 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். கை, கால் ஊனம், கண் பார்வையற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியா தோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு, தொழு நோய் பாதிப்பு மற்றும் குள்ளத்தன்மையுடன் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் தேவையான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ‘பெர்சன் வித் டிசைபல்’ என்ற புதிய வகை செயலியை (ஆப்) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்க வேண்டும். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, தங்களது தேவைகளை பதிவிட வேண்டும். பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு ஏற்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும். இந்த ஆதாரத்தை பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் சக்கர நாற்காலி உள்ளிட்ட தங்களுக்கு பயன்பட கூடிய பொருட்களை கேட்டுப் பெற முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றாலும் இதில் புகார் பதிவு செய்யலாம். பதிவிட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment