FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Friday, February 4, 2022

மாற்றுத்திறனாளி ஜோடி பெற்றோர் எதிர்ப்பபை மீறி திருமணம்

04.02.2022
தாவணகரே--வாட்ஸ் ஆப் செயலி மூலம் வளர்த்த மாற்றுத்திறனாளி காதல் ஜோடி, நேற்று பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.தாவணகரேவின் ஹரப்பனஹள்ளி அருகே உள்ள கடபகரே கிராமத்தை சேர்ந்தவர் அக்சதா, 25 என்ற பெண். ஹாவேரியின் ராணிபென்னுாரு அருகே உள்ள வட்லகேரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சு வால்மீகி, 25 என்ற ஆண். இருவரும் வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள். தாவணகரேயில் உள்ள மவுனேஸ்வரா காது கேளாதோர் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தனர். சஞ்சு பெங்களூரில் ஐ.டி.ஐ., படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பின் இருவரும் மொபைல் போனில் வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். நாளடைவில் இருவரும் காதலில் விழுந்தனர். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் ஜாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனாலும் காதலில் தீவிரமாக இருந்த இருவரும் நேற்று தாவணகரேயில் திருமணம் செய்து கொண்டனர். அக் ஷதா அண்ணன் போலீசில், தங்கை கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். எனவே, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, அந்த தம்பதி மனு அளித்துள்ளனர்.


No comments:

Post a Comment