FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Friday, July 4, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


01.07.2025 சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம். 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025 ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (i-a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி/ நகராட்சி/மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு n ://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 17-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் 17-ம் தேதி அன்று மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment