FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Saturday, July 5, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சூப்பர் வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சூப்பர் வாய்ப்பு

தமிழகத்தில் 13,357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தமிழகத்தில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, இதற்கான வேட்புமனுக்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. அந்தவகையில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், பேரூராட்சிகள் இயக்குனரகம், ஊரக வளர்ச்சி இயக்குனரகம் ஆகியவற்றின் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் இந்த விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment