FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, July 10, 2017

காது கேட்க உதவும் கருவிகளுக்கு காசு கொடுக்காமல் போன சசிகலா!

09.07.2017
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி இருக்கும் அதிமுக (அம்மா) கட்சி பொதுச்செயலாளர் சசிகலா சிறை செல்லும் முன்பு ராமபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அங்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அதே வளாகத்தில் உள்ள வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்கு விசிட் செய்து அங்குப்படிக்கும் குழந்தைகளுக்குக் காது கேட்க உதவும் கருவிகளை வழங்கினார்.

'18 லட்ச ரூபாய் மதிப்பில் 245 காது கேட்க உதவும் கருவிகள் வாங்கிக்கொடுத்ததோடு சரி. ஆறு மாதம் காலமாகியும் இன்னும் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் அந்தக் கருவியை உடனே திரும்பி எடுத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது' என்று கருவி வழங்கிய நிறுவனம் கதறலோடு ஊடகத்துறைக்கு தகவல் வழங்கி இருக்கிறார்கள். மேலும், 'எங்களுக்கு பணம் வழங்காத தகவலை போயஸ் கார்டனிலும் தெரிவித்து விட்டோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கருவிகள் வழங்கிய கையோடு பள்ளிக்கு பத்து லட்ச ரூபாய் காசோலையையும் வழங்கினார் சசிகலா. அந்தக் காசோலையில் உள்ள கையெழுத்து சரியாகப் பொருந்தி வரவில்லை என்று காசோலையை வங்கியும் திருப்பி அனுப்பி விட்டது' என்று கூடுதல் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்

இது குறித்து வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் செய்தியாளர்கள் கருத்துக்கேட்ட போது "காசோலை திரும்ப வந்தது குறித்து நாங்கள் கருத்துச் சொல்ல விரும்ப இல்லை. ஆனால், கடந்த காலங்களில் எங்கள் பள்ளிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது எங்களது பள்ளி பெரிய அளவில் பாதிப்படைந்தது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் அதிமுக தலைமைக்கழகம்தான் நிறைய நிதி உதவி வழங்கி இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment