FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, April 14, 2025

37,864 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி பராமரிப்பு உதவித்தெகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



14.04.2025 
சென்னை: தென்சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71.26 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் மொபட்கள் மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிக்கப்பட்ட ரூ.80,995 மதிப்பிலான ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி, சோழிங்கநல்லூர், எஸ்.வி.கணேஷ் நாயக்கர் திருமணமண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்ேகற்று மொபட்களை வழங்கி பேசியதாவது:

தென் சென்னை மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் 6,656 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,67,20,000 பராமரிப்பு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-25ம் நிதியாண்டில் 23 பயனாளிகளுக்கு ரூ.3,78,340 வங்கிகடன் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் பொருட்டு ஒரு நபருக்கு ரூ.50000 வீதம் 2024-25ம் நிதியாண்டிற்கு வழங்கப்பட்டள்ளது. 3 நபருக்கு ரூ.1,50,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2024-25ம் நிதியாண்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை வரை பயிலும் 1009 மாற்றுத்திறனாளி ரூ.5.90,76,000 கல்வி உதவித்தொகையும், 197 பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.9,35,000 வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் இணைப்பு பொருத்தப்பட்ட பெட்ரோல் வழங்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,13,78,000 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மேக்னிபயர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, மடக்கு குச்சி, பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி, செயற்கை கால், கால்தாங்கிகள், காதுக்கு பின்னால் அணியும் காதொலிகருவி மற்றும் காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்ட்ராய்டு போன், ஆகிய உதவி உபகரணங்கள் 452 நபர்களுக்கு ரூ.15.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு ரூ.32,20,526 வங்கிகடன் மானியம், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மேக்னிபயர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் 452 நபர்களுக்கு ரூ.5.15.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 37,864 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சேழிங்கநல்லூர் மண்டல குழுத்தலைவர் மதியழகன், பெருங்குடி மண்டலக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார், மாமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment