FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, October 23, 2014

காதலி கொலை: பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டு சிறை

தோழியைக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க நட்சத்திர பாராலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு செவ்வாய்க்கிழமை சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரி.
 21 October 2014
காதலியைக் கொன்ற வழக்கில், தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பாராலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸýக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு நிதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

தென் ஆப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனின் பிரிடோரியா பகுதியிலுள்ள பிஸ்டோரியஸின் (27) இல்லத்தில், தோழி ரீவா ஸ்டீகெம்பை (30) சுட்டுக் கொன்றதாக கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குளியலறைக்குள் ரீவா இருந்தபோது, அவரை அத்துமீறி உள்ளே நுழைந்த
அன்னியர் என்று தவறாக நினைத்து சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பிஸ்டோரியஸ் பலமுறை கண்ணீர் விட்டு அழுததுடன், அடிக்கடி வாந்தியும் எடுத்தார்.

இது உலகம் முழுவதும் பெரும் அனுதாப அலையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்து நீதிபதி தோகோஸிலே மஸிபா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிஸ்டோரியஸ் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்துக்காக மூன்று ஆண்டுகள் "இடைநிறுத்த' சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது (நன்னடைத்தை அடிப்படையில் இந்தத் தண்டனை பிற்காலத்தில் நீக்கப்படலாம்).

இந்த வழக்கில் குற்றத்துக்கு சரியானத் தண்டனை வழங்குவது, குற்றம் மேலும் நடைபெறாமல் தடுப்பது, குற்றவாளியை சீர்திருத்துவது ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில், ஏழைகளுக்கு ஒரு சட்டமும், செல்வமும், புகழும் நிறைந்தவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க வேண்டும் என சிலர் எதிர்பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

பிஸ்டோரியஸ் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், சிறையில் அவருக்கு ஆபத்து நேரிடும்; எனவே அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல.

மாற்றுத் திறனாளி என்றாலும், சூழல்களை சமாளிக்கும் திறன் பிஸ்டோரியஸýக்கு உள்ளது.

குற்றம்: மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான ஆயுதத்தைக் (துப்பாக்கி) கொண்டு, ரீவா இருந்த குளியலறைக் கதவில் பிஸ்டோரியஸ் ஒரு முறை அல்ல, நான்கு முறை சுட்டுள்ளார்.

அந்த மிகச் சிறிய குளியலறைக்குள் இருப்பவர், அங்கிருந்து தப்பியோட சிறிதும் வழியில்லாத நிலையில் அவர் இத்தனை முறை சுட்டுள்ளார் (எனவே இது கொலையே ஆகும்) என்று நீதிபதி மஸிபா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று நடைபெற்ற இந்தக் கொலையில், பிஸ்டோரியஸ் மீதான மற்ற தீவிர குற்றச் சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment