FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Wednesday, January 14, 2015

பேச முடியாத பெண் பாலியல் பலாத்காரம்குடும்பத்தையும் ஒதுக்கி வைத்த கொடூரம்:'தீப்பெட்டி கூட தரக்கூடாது'

11.01.2015, ஓசூர்:
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைத்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூர் அருகே உள்ள, தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்திரப்பா என்பவரின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம், 25ம் தேதி, நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த முத்தப்பா, 26, மாதப்பா, 22, ருத்தரப்பா, 22, சித்தலிங்கா, 23, என்ற நான்கு பேரை கைது செய்தனர்.நான்கு பேருக்கும் சாதகமாக செயல்பட்ட ஊர் தலைவர்கள் சிலர், சிறுமியின் குடும்பத்தை, ஊரை விட்டு தள்ளி வைத்தனர். வீரபத்திரப்பா புகாரின் பேரில், அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரபத்திரப்பா, புகார் மனுவில் கூறியுள்ளதாவது:என் குடும்பத்திற்கு, உப்பு, புளி, தீப்பெட்டி தரக்கூடாது என, அப்பகுதியில், கடை நடத்தி வரும் முருகனிடம் உத்தரவிட்டுள்ளனர். 'கைதான வாலிபர்கள், விடுதலையாகி வருவதற்குள், ஊரை விட்டு ஓடி விடுங்கள். இல்லாவிட்டால், அவர்களை விட்டு, உங்களை அடித்து, துரத்த வேண்டிய நிலை ஏற்படும்' என, மிரட்டுகின்றனர். இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment