FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, February 10, 2016

சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் மாபெரும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

10.02.2016, தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, வேப்பேரியில் உள்ள தனியார் மண்படத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்கள் கோஷம் எழுப்பியவாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே.சம்பத் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுக்க முயன்ற போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 பேரை தலைமை செயலாளர் கு.ஞானதேசிகனை சந்திக்க போலீசார் தலைமை செயலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மாற்றுத்திறனாளிகள் குழுவினர் வேப்பரி வந்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளை சேர்ந்த தீபக், அண்ணாமலை, ஜான்சிராணி, மனோகரன் உள்பட நிர்வாகிகள் கூறுகையில், தலைமை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கால அவகாசங்கள் கொடுங்கள் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் 16-ந்தேதி கூட உள்ளது. ஆகவே அதுவரை எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் 17-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கூட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

No comments:

Post a Comment