FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Friday, December 2, 2016

மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுரை

02.12.2016, கரூர்,
மாற்றுத்திறனாளிகளின் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று கரூரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

உடலாலும், மனதாலும் வளம் குன்றியவர்களை புறந்தள்ளாமல் அவர்களுக்குள் இருக்கும் திறனை கண்டறிந்து அவர்களது வாழ்வை வளப்படுத்த வேண்டும். அந்த நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3–ம் நாளை உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவாக அரசு கொண்டாடி வருகிறது.

கல்வி

இந்த நாளில் மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளியில் கொண்டு வந்து அதன் வாயிலாக அவர்களது வாழ்வில் ஏற்றம் தரத்தக்க வகையில் ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்கள் மாற்றுத்திறன் படைத்த மாணவ– மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று மாற்றுத்திறன் படைத்தவர்களின் திறன்களுக்கேற்ப ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment