FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, December 18, 2016

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு அதிகரிக்க மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு

16.12.2016
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை உயர்த்தும் மத்திய அரசின் மசோதாவை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியிருக்கும் புதிய மசோதாவில் மாற்றுத் திறனாளிகளின் வகை 7ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளதும், அரசு வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதும், உயர்கல்வியில் 3% இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் அவர்களின் நலனுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் திமுக அரசு இருந்தபோதுதான் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக ஒரு துறை முதல்வரின் நேரடிப் பார்வையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. ஊனமுற்றோர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் முடிவிற்கு இணங்க மாற்றுத் திறனாளிகள் என்று அழைத்ததும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசுதான் என்பதை இங்கே பதிவு செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அது மட்டுமின்றி, அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி நியமனம் செய்வதற்கு, சிறப்பு நேர்முக தேர்வு நடத்தியதும், அந்த இட ஒதுக்கீடு முறைப்படி அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைத்ததும் திமுக ஆட்சியில்தான்.

ஆகவே, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திமுக அரசு பாடுபட்டது போல் தற்போது இருக்கும் அதிமுக அரசும் பாடுபட வேண்டும் என விரும்புகிறேன். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவைத் தொடர்ந்து தமிழக அரசும் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்கல்வியில் உள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தியும், மாநிலத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் இருக்கும் 3 சதவீத இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தவும் முன்வர வேண்டும் எனவும், காலியாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment