FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, January 3, 2014

216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சென்னை, 03 January 2014
மாற்றுத்திறனாளிகள் 216 பேருக்கு ரூ. 23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம்,

ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டர்கள் 3 பேருக்கும், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற 2 பேருக்கு ரூ. 1 லட்சமும், ரூ. 92 ஆயிரத்து 400 மதிப்பிலான கால் தாங்கிகள் 28 பேருக்கும், ரூ. 29 ஆயிரத்து 800 மதிப்பிலான நவீன செயற்கை அவயம் 2 பேருக்கும், ரூ. 77 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 20 பேருக்கும் வழங்கப்பட்டது.

ரூ. 12 லட்சம் மதிப்பிலான மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகள் 100 பேருக்கும் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான ரூ. 7 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு உதவித்தொகை அனுமதி ஆணைகள் 61 பேருக்கும் வழங்கப்பட்டது.

ஆக மொத்தம் 216 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 90 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலேயே தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக தேசிய விருதினை பெற்றுள்ளது. அரசு செய்து வரும் இந்த உதவிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்றார்.

இந்த விழாவில் அரசு செயலர் பி.சிவசங்கரன், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் க.மணிவாசன், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கா.ஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment