FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Friday, November 27, 2015

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி... டிசம்பர் 22 முதல் அமல்

27.11.2015, டெல்லி: 
ரயில்வே டிக்கெட் முன்பதிவின்போது மாற்றுத் திறனாளிளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு அப்பர் பெர்த் இனிமேல் ஒதுக்கப்பட மாட்டாது. மாறாக லோயர் பெர்த் அல்லது மிடில் பெர்த் ஒதுக்கப்படும். இதன் மூலம் அப்பர் பெர்த்ஒதுக்கப்பட்டு அதில் ஏற முடியாமல் தவிக்கும் அவலத்திலிருந்து உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுடன் துணையாக வருவோருக்கு மிடில் பெர்த் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. டிசம்பரில் அமல்... 
டிசம்பர் 22ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. உடல் ரீதியாக மாற்றுத் திறனாளிகளாக உள்ளோருக்கு லோயர் பெர்த் மற்றும் மிடில் பெர்த் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே இதில் முன்னுரிமை தரப்படும்.

2. லோயர் பர்த் மட்டுமே... 
உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு லோயர் பர்த் மட்டுமே தரப்படும். அவர்களுடன் துணைக்கு வரும் நபர் இருந்தால் அவர்களுக்கு மிடில் பெர்த் தரப்படும்.

3. மாற்று ஏற்பாடு... 
மேலும் உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் சீட் இல்லாமல் போனால், அதற்கான அதே சலுகையுடன் பிற கோட்டாவில் உள்ள சீட்களைப் பெறவும் இனி வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் இடம் இல்லாவிட்டால் பொது கோட்டாவிலிருந்து இடம் தரப்படும், அதே கட்டணச் சலுகையுடன்.

4. காரணம்... இதுதொடர்பாக வந்த பல்வேறு புகார்கள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து இப்போது ரயில்வே அமைச்சகம் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment