FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, January 9, 2016

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்

09.01.2016, கடலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள 1½ லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. காதுகேளாத, வாய்பேசமுடியாத 6 வயதுக்குபட்ட குழந்தைகளுக்கு குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை(காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தும் சிகிச்சை) மேற்கொள்ள தலா 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகும் செலவினத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம். எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் பெறலாம். மேற்கண்ட 4 நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். இதுபோன்ற உயர்தர சிகிச்சை சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.

1016 நோய்கள்

இதுதவிர முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,016 நோய்களுக்கு சிகிச்சைகளும், 23 வகையான நோய்களுக்கான பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சில நோய்களுக்கு 1½ லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம்.

கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 515 பேருக்கு தீக்காயம் தொடர்பான சிகிச்சையும், 5,498 பேருக்கு புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சையும், 1,726 பேருக்கு கண்நோய் சிகிச்சையும், 9,785 பேருக்கு ரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான சிகிச்சையும், 3,314 பேருக்கு இருதய நோய்களுக்கான சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

34 ஆயிரம் பேர் பயன்

இதன் மூலம் இதுவரை மொத்தம் 33 ஆயிரத்து 882 பேர் பயனடைந்து உள்ளனர். இதற்காக 70 கோடியே 60 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 FREEஎன்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் புதிய அடையாள அட்டை பெற 7373004559, 7373004561, 7373004564 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment