Monday, November 25, 2013
Saturday, November 23, 2013
நெல்லை : மெக்கானிக் பணியில் கலக்கும் பார்வையற்ற சகோதரர்கள்
22.11.2013,
திருநெல்வேலி அருகே மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதில் பார்வையற்ற சகோதரர்கள் இருவர், நிபுணர்களாகத் திகழ்கின்றனர்.
திருநெல்வேலி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், மூன்றடைப்பு அருகேயுள்ள சிறிய கிராமம் மருதகுளம். இங்கு பார்வையற்ற சகோதரர்கள் இ.முத்துக்குமார் (27), இ.நயினார் (25) ஆகியோர் நடத்திவரும் டூ வீலர் ஒர்க் ஷாப் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
முத்துக்குமார் 5-ம் வகுப்பு படித்தபோது திடீரென்று பார்வை மங்கியது. கண் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்தபோது பார்வை நரம்பு கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், அவரது பார்வை குறைபாடு நீங்கவில்லை. படிப்படியாக பார்வை மங்கி, கடைசியில் அறவே பார்வை தெரியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை வெளிச்சம் தெரிந்தது. அதுவும் பின்னர் இல்லாமல் போனது. இதுபோல், இவரது தம்பி நயினாருக்கும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வலது கண்ணில் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கண்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு கண்ணில் தற்போது மங்கலாக பார்வை இருக்கிறது. இதற்காக அவர் கண்ணாடி அணிந்திருக்கிறார்.
பார்வையற்ற இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை மருதகுளத்தில் மண் குடிசையொன்றில் டூ வீலர் ஒர்க் ஷாப் நடத்தி வந்தனர். பஞ்சர் ஒட்டுவது, செயின் பிராக்கெட் மாற்றுவது, கார்பரேட்டர் கிளீனிங், போர்க் பெண்ட் எடுப்பது, என்ஜின் வேலை, காயில் செக் அப், ஹாரன், லைட் பழுது பார்ப்பது என்று அனைத்து வகையான பழுதையும் நீக்குவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.
தங்களுக்கு ஒர்க் ஷாப் அமைக்கவும், தேவையான உபகரணங்களை வாங்கவும், வங்கி கடன் கேட்டனர். இதற்காகா, 2009ம் ஆண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, அப்போதைய ஆட்சியர் எம். ஜெயராமன் முன்னிலையில் ஒரு பைக்கை கழற்றி, மாட்டிக் காட்டினர்.

Friday, November 22, 2013
Wednesday, November 20, 2013
சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை
19.11.2013,
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் ஆசிரியர் பணியினை அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணியிட மாற்றத்துக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர் வி.கே.ஜெயக்கொடி பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:
தமிழகத்தில் உள்ள 34-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஊழியர்களுக்கு முடிந்தவரை அவர்களது சொந்த ஊர்களிலேயே பணியிடம் வழங்க வேண்டும் என பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசுப் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது பணியிட மாறுதல் வழங்கும் போதும், பதவி உயர்வு அளிக்கும் போதும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமையில், சொந்த மாவட்டங்களில் பணியிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒற்றைச் சாளர முறை கடைபிடிக்கும் போதும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென அரசுத் துறைகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் வி.கே.ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த உத்தரவால் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலைக்காக தங்களது உடல் அசெளüகரியங்களை சிரமத்துடன் பொறுத்துக் கொண்டு பணியாற்றவேண்டிய அவலநிலையை அரசின் இந்தச் சலுகையால் போக்கமுடியும் என நிம்மதியுடன் அவர்கள் தெரிவித்தனர்.
Thanks to

Tuesday, November 19, 2013
Monday, November 18, 2013
Thursday, November 14, 2013
உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்
ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.
நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...!!!
Sunday, November 10, 2013
போலி அட்டைகளை தடை செய்ய மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
09.11.2013, திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டத்தில் உண்மையான மாற்றுத் திறனாளிகளுக்கு இடையே ஊடுருவியுள்ள போலியான மாற்றுத் திறானாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய கோரி நேற்று காலை அம்மையார்குப்பத்தில் மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறானளிகள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அம்மையார்குப்பத்தில், போலியான மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வலியுறுத்தி நேற்று காலை மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துவக்கிவைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக அரசு மருத்துவர்களால் போலியாகச் சான்று பெற்றுள்ளவர்களின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூலியாக, மத்திய அரசு நிர்ணயித்த ரூ.148 வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளைப் பணிதல பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்யாமல், நன்றாக இருப்பவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று பொய்யாக அடையாள அட்டை வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆர்கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலாயுதம், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா சுந்தரவேல், ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து, மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Thursday, November 7, 2013
சர்வதேச காது கேளாதோர் தினம் மகிழ்ச்சி கையெழுத்திடும்
56TH சர்வதேச காது கேளாதோர் தினம் ஞாயிறு மாலை பார்வையற்ற மற்றும் காதுகேளாதோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட் பெரும் வீரியம் மற்றும் சந்தோஷங்களையும் கொண்டாடப்பட்டது .
நிகழ்வு இந்த கூட்டத்தில் கலந்து மாநில முழுவதும் இருந்து காது கேளாதோர் மற்றும் பல விசாரணை மற்றும் பேச்சு பலவீனமான நபர்கள் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது . 300 க்கும் மேற்பட்ட பேச்சு மற்றும் மதுரை , கோயம்புத்தூர் , விழுப்புரம் , நாமக்கல் , தஞ்சாவூர் , கிருஷ்ணகிரி மற்றும் Dhindivanam இருந்து பலவீனமான மக்கள் கேட்கும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அனைத்து பங்கேற்பாளர்கள் அனைத்து வயதினரும் மற்றும் வெவ்வேறு வாழ்க்கை இருந்து செவிடு அல்லது ஊமை ஒன்று . இன்னும் சில அரசு வேலை .
மாநிலத்தில் பல செவிடு சங்கங்களின் தலைவர்கள் செயல்பாடு தலைமை . VR வெங்கடேசன் , ' சைலன்ஸ் சகோதரத்துவம் ' மற்றும் ஏற்பாடு செயலாளர் ஆசிரியர் சைகை மொழி படங்களையும் பயன்படுத்தி சேகரிப்பது உரையாற்றினார் . அவர் அவர்கள் தமிழ்நாடு விழிப்புணர்வு பரவ வேண்டும் என்று கூறினார் . அவர் செவிடு மற்றும் ஊமை வேலைகள் சதவிகித இடஒதுக்கீடு இரண்டு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார் .
வி சுவாமிநாதன் , காது கேளாதோர் தமிழ்நாடு மாநில கூட்டமைப்பு தலைவர் " செவிடு மற்றும் ஊமை மக்கள் சமுதாயத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கூடாது ஆனால் சாதாரண உலக சங்கமமாகும் வேண்டும் " என்றார்.
இன்னும் பல வேலைகள் இருந்தாலும் அதை பல நிறுவனங்கள் விசாரணை மற்றும் பேச்சு பலவீனமான மக்கள் பயன்படுத்தி தவிர்க்க முனைகின்றன என்று வெங்கடேசன் மூலம் குறிப்பிட்டார்.
ஆனால் தங்கள் இயலாமை அப்பால் கடந்த 10 ஆண்டுகளாக உரிமம் பெற்ற பஸ் இயக்கி வருகிறது ஸ்டீபன் போன்ற achievers உள்ளன . அவர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை மேலும் அங்கு டிரைவர்கள் குழு தலைமை .
" வாய்ப்பு கொடுக்கப்பட்டால், நாம் பெரிய விஷயங்களை சாதிக்க முடியும் , " ஸ்டீபன் என்கிறார் .
நிகழ்வின் நடவடிக்கைகள் மற்ற எந்த சாதாரண கூட்டம் போல் இருந்தது ஆனால் அதற்கு பதிலாக ஒலி கை இயக்கங்கள் ஒரு அக்கிராமத்தில் இருந்தது . ஜனாதிபதி கல்லூரியில் இருந்து செவிடு மற்றும் ஊமை மாணவர்கள் கலந்து கொண்டனர் . நிகழ்வை தங்கள் இயலாமை பகிர்ந்து மக்கள் நேரத்தை செலவழித்து பின்னர் சக்தியூட்ட பங்கேற்பாளர்கள் ஒரு மகிழ்ச்சியான குறிப்பு முடிவடைந்தது .
மேலும் டாக்டர் ரெட்டி அறக்கட்டளை , Arumbakkam மற்றும் கலங்கரை விளக்கம் வரை காலை 9 மணிக்கு மெரினா கடற்கரை நெடுகிலும் தொழிலாளர் சிலை செய்ய காது கேளாதோர் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மார்ச் சங்கம் இணைந்து , நாள் காது கேளாதோர் இயக்கப்பட்டன அறக்கட்டளை நினைவாக . மார்ச் இறுதியில் , பல பேச்சு பலவீனமான மக்கள் அடையாளம் மொழி கற்று பொதுவான குடிமக்கள் தேவையை வலியுறுத்தினார் .
நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்
From தமிழ் செவிடு வாழ்க்கை

Wednesday, November 6, 2013
'பார்வை இல்லாதவங்களுக்கு படிகளா இருக்கணும்'
டூவீலர் பழுதுபார்க்கும் மாற்றுத் திறனாளி கண்ணப்பன். |
உறையூர் காவல் நிலையம் ஏரியாவில் படுபிஸியான டூ வீலர் மெக்கானிக் கண்ணப்பன். நகரின் பல பகுதிகளில் இருந்தும் இவரைத் தேடி வருகிறார்கள் வாடிக்கையாளர்கள். பைக் சத்தத்தை வைத்தே அதில் என்ன ரிப்பேர் என கண்டுபிடித்து சரி செய்து தருவது இவரது சிறப்பியல்பு. இத்தனைக்கும் இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி.
“ஈடுபாடும் தன்னம்பிக்கையும் இருந்தால் முடியாதது எதுவுமே இல்லை’’ என்கிறார் கண்ணப்பன். நான்கு வயதில் வந்து தாக்கிய மூளைக்காய்ச்சல், அவரது பார்வையைப் பறித்துக்கொண்டு போனது யாருமே எதிர்பார்க்காத சோகம். ஆனால், அந்தக் குறையை வெளிக்காட்டாமல் எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் துறுதுறுவென வேலை செய்கிறார். அவரிடம் பேசியபோது…
எனக்கு மீண்டும் பார்வை வர வாய்ப்பே இல்லைன்னு டாக்டர்கள் சொன்னதைக் கேட்டு அப்பாவும் அம்மாவும் அழுது புரண்டது இன்னமும் நெஞ்சில் நிழலாடுது. அன்னைக்கி அவங்க கதறிய கதறலும் சிந்திய கண்ணீரும்தான் இன்னைக்கி என்னைய இந்தளவுக்கு உயர்த்தி இருக்கு.
பார்வையில்லாம போனாலும் புள்ளைய நல்லா படிக்கவெச்சு முன்னுக்கு கொண்டுவரணும்னு அப்பாவும் அம்மாவும் நினைச்சாங்க. அதனால, பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டாங்க. ஆனா அங்க, டாய்லெட் சுத்தம் பண்ற வேலையும் கூட்டிப் பெருக்குற வேலையும் குடுத்ததால ஒரே வாரத்துல ஓடி வந்துட்டேன். அதோட படிப்புக்கு முழுக்குப் போட்டாச்சு. 15 வயசு இருக்கும்போது, செயற்கை வைரம் பட்டை தீட்டக் கத்துக்கிட்டேன். ஆனா, என்னோட நேரமோ என்னவோ.. அந்தத் தொழிலும் சீக்கிரமே நலிஞ்சு போச்சு.
வேலை இல்லாம உக்காந்து சாப்பிடுறது உறுத்தலா இருந்துச்சு. அதனால, நண்பனோட சைக்கிள் கடையில பஞ்சர் ஒட்டுற வேலையைப் பார்த்தேன். அதுல போதிய வருமானம் கிடைக்கல. எட்டு வருஷத்துக்கு முந்தி, டூ வீலர் மெக்கானிக் வேலையை கத்துக்கிட்டேன். என்னோட நண்பர் ஒருத்தர்தான் பொறுமையா எனக்கு தொழிலை சொல்லிக் குடுத்தாரு. அவர் மூலமா எல்லாத்தையும் கத்துக்கிட்டு நாலு வருஷத்துக்கு முந்தி, இந்த ‘மெக்கானிக் ஷாப்’பை ஆரம்பிச்சேன். எந்தக் கம்பெனியோட டூ வீலரா இருந்தாலும் அது ஓடுற சவுண்டை வைச்சே என்ன கோளாறுன்னு கண்டுபிடிச்சு சரி பண்ணிடுவேன்.
எல்லோரையும் போல நாமும் உழைத்துச் சம்பாதித்து, சொந்தக் காலில் நின்று குடும்பத்தைக் காப்பாத்தணும். அதைப்பார்த்து பெத்தவங்க சந்தோஷப்படணும் என்பதுதான் சின்ன வயசுல நான் எடுத்துக்கிட்ட சபதம். இப்போ நல்ல நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால், இதைப் பார்த்துச் சந்தோஷப்படுறதுக்கு அம்மா உயிருடன் இல்லை. மெக்கானிக் டிரெயினிங்ல இருக்கும்போதே அவங்க இறந்துட்டாங்க.
இந்தத் தொழில்ல வர்ற வருமானத்தை வைச்சு ஏதோ கஷ்டப்படாம கஞ்சி குடிக்கிறோம். சம்பாதிச்சு சொந்தமா ஒரு வீடு வாங்கணும். அடுத்ததா இன்னொரு ஆசை இருக்கு. இந்த மெக்கானிக் ஷாப்பை இன்னும் பெருசா விரிவுபடுத்தணும். அதுல என்னை மாதிரி பார்வையில்லாதவங்க ஐம்பது பேருக்கு தொழில் பயிற்சி குடுத்து, அவங்களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தணும். பார்வையற்றவங்களுக்கு படிகளா இருந்து உயரத்துல ஏத்திவிடணும். இதற்காகவே கல்யாண ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டேன்…’’ என்று சிரித்தபடி சொன்னார் கண்ணப்பன்.
Sunday, November 3, 2013
மாற்றுத்திறனாளிகளுக்கு NHFDC வழங்கும் கல்விக்கடன்
03.11.2013,
தொழில்சார் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கல்விக்கடன் வழங்குகிறது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழில்சார் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கல்விக்கடன் அதிக பட்சமாக 2 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
Auto CAD, Web Designing, Computer Software அல்லது Hardware, Office Management, Secretarial Course, 3D / 2D Animation, Graphics Design, Automobile Diploma உள்ளிட்டவற்றை படிக்கும் மாற்றுத்திறனாளிகள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். அல்லது 0129 - 2287 512 மற்றும் 0129 - 2287 513 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

Subscribe to:
Posts (Atom)