FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label விடாமுயற்சி. Show all posts
Showing posts with label விடாமுயற்சி. Show all posts

Wednesday, July 26, 2023

பானிபூரி வியாபாரத்தில் அசத்தும் வாய் பேச, காது கேட்க முடியாத தம்பதி




கிஷோர் மற்றும் அவரது மனைவி மனிஷாவுக்கு பேச மற்றும் காது கேட்க இயலாது. ஆனால், இந்தத் தடைகளைக் கடந்த அவர்கள் தற்போது நாசிக்கில் பானிபூரி கடை நடத்திவருகின்றனர். அவர்களால் கேட்க மற்றும் வாய் பேச முடியாவிட்டாலும்கூட அவர்களின் சிரிப்பு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

வாழ்க்கையின் எத்தனையோ கஷ்டங்கள் வந்த போதும் சோதனைகளை புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை மந்திரமாக வைத்துள்ள இந்தத் தம்பதியின் கதை பலருக்கும் ஊக்கமளிக்கும்.



Thursday, December 24, 2015

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை தந்த கணினி பயிற்சி: வெற்றிப் படிக்கட்டுகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்

24.12.2015, அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான தன்னம்பிக்கை மற்றும் திறனை கணினி பயிற்சியால் பெற்றுவருகின்றனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்.

எப்போதும் இணையத்துடன் இணைந்திருக்கும் இந்த உலகில் கணினி இல்லையென்றால் எதுவும் சாத்தியம் இல்லை. சிபியு, மானிட்டர் போன்றவற்றின் பெயர்களை வார்த்தைகளாக மட்டும் காதால் கேட்டுப் பழகிய பார்வையற்றோர், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கணினியை எளிதாக கையாள்வது சாத்தியம் என்பது உறுதியாகியுள்ளது.

பிரெய்லி எழுத்துகளை கையால் உணர்ந்து படித்து வந்த பார்வை யற்றோர் இப்போது கணினியின் திரைகளில் தெரியும் எழுத்துகளை திரை வாசிப்பான் மென்பொருள் உதவியுடன் சொற்களாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்கின்றனர். இந்த வசதியால், படித்த பார்வையற்ற பலர் இன்றைக்கு இணையத்தைப் பயன்படுத்துவதும், சாட் செய்வதும், மெயில் அனுப்புவதும், புத்தகங்கள் வாசிப்பதும் சாதாரணமாகிவிட்டது.

இதை பலர் ஆக்கப்பூர்வமாக போட்டித் தேர்வுக்கு தேவையான பாடங்களை படிப்பதற்காகப் பயன் படுத்துகின்றனர். பெருநகரங்களில் பார்வையற்றோருக்கான இத் தகைய கணினி பயிற்சி எளிதாகக் கிடைத்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறுகுறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் படித்த பார்வையற்றோர் பயன்பெறும் நோக்கில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் மையம் சார்பில், 3 ஆண்டுகளுக்கு முன்பே 5 நாள் மற்றும் 3 நாள் கணினி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பால் பயன்பெற்ற பலர் இன்று பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தனியார் நிறுவனங்களிலும் பணியில் உள்ளனர்.

தற்போது மத்திய அரசு ஆணைப்படி வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பார்வையற்றோருக்கு ஒரு சதவீதம் ஒதுக்கியுள்ளனர். இதையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தினர் ஒரு மாதகால கணினி பயிற்சி வகுப்புகளை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 இடங்களில் நடத்தி முடித்ததுடன் தொடர்ந்து அடுத்த கட்டப் பயிற்சிக்கும் தயார்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பயிற்சி மையத்தின் துறைத் தலைவர் முனைவர் பிரபாவதி கூறியதாவது: பார்வையற்றோர் கணினியைப் பயன்படுத்துவதில் தன்னிறைவு பெறுவதன் மூலம் கற்றல் மற்றும் வேலைவாய்ப்பு பெற முடியும். இப்பயிற்சி மூலம் இவர்களுக்கு மொழிவளம், பகுத்தறியும் திறன், சொல்லியல் திறன் மற்றும் முக்கியமாக போட்டித் தேர்வுக்கான அனைத்து திறன்களும் கிடைக்கும்.

பயிற்சிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பார்வையற்றோரின் வசதிக்காக (என்விடிஏ) திரை வாசிப்பான் மென்பொருள், பயிற்சிக் கையேடு அடங்கிய ஒலிப் புத்தகம் வழங்குவதால் அவர்கள் தங்களுடைய கணினி, மடிக்கணினியில் இவற்றை இயக்கிக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் பார்வையற்றோருக்கு கணினி பயிற்சி மிக அவசியம். தங்குமிடம் உணவு உட்பட இலவசமாக கிடைக்கும். இதுபோன்ற பயிற்சியை பின்தங்கிய பகுதிகளில் உள்ள பார்வையற்றோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

“படிக்கும்போது சக மாணவிகள் கணினியைப் பற்றிக் கூறும்போது அதன் பயன்பாடு குறித்து வியந்துள்ளேன். ஆனால், இந்த பயிற்சி மூலம் அவர் கூறியதை என்னால் உணர முடிந்தது. திரை வாசிப்பான் மென்பொருள் உதவியுடன் தற்போது அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களை நான் படிக்கிறேன். ஏனென்றால் எங்கள் உலகமும் போட்டி நிறைந்ததாகி விட்டது. போட்டியை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கணினி பயிற்சி எனக்குத் தந்துள்ளது” என்கிறார் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான முத்துலட்சுமி.

Sunday, October 18, 2015

காது கேட்காவிட்டால் என்ன? அமிதா

17.10.2015, தில்லி சாந்தினி சவுக்கைச் சேர்ந்தவர். நடுத்தரக் குடும்பம்தான். காது கேளாதவர் என்று மூன்றாவது வயதில் தெரிந்தது. ஒதுங்கி நிற்காமல் பள்ளி இறுதிப்படிப்பு வரை முடித்து, பாலிடெக்னிக்கிலும் சேர்ந்து ஓவியம் பயின்று, ஓவியராகிவிட்டார்.
அவரது ஓவியம் குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. அமிதா தாத்தாவின் முன்னேற்றத்தில் கணவர் தத்தாவின் பங்கு உண்டு. அவரும் ஒரு காது கேளாதவர்தான். வாழ்க்கையில் வெற்றிபெற ஊனம் ஒரு குறையல்ல என்று நிரூபித்து வருகிறார்கள்.

Tuesday, December 23, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வாய்ப்புகள்

மும்பையைச் சேர்ந்த ஈரோஏபிள் கால்சென்டரில் ஏஜெண்டாகப் பணியாற்றும் வீரேந்திர சிங்கைப் பொறுத்தவரை தாறுமாறாக நடந்துகொள்ளும் வாடிக்கையாளர்களைக் கையாள்வதில் தேர்ந்தவர். எப்போதும் தொலைபேசியில் கடுமையாகப் பேசும் ஒரு வாடிக்கையாளர் ஒருநாள் வீரேந்திர் சிங்கை நேரில் வந்து சந்தித்து ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து அதிர்ச்சியை அளித்தார்.

“எங்களிடம் வாங்கிய தயாரிப்புக்குச் சரியான காலத்தில் நாங்கள் சர்வீஸ் செய்யாமல் போனதால் கடுப்பான வாடிக்கையாளர் இவர்” என்கிறார் இந்த கால்சென்டரின் சிஇஓ-வான மார்சின் ஷ்ராஃப். யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் கால்சென்டர் சேவை நிறுவனம்தான் ஈரோஏபிள்.

சிங்கின் அமைதியான நடத்தையும் தொழில்நுட்பரீதியான அறிவும் கடுப்பில் இருந்த வாடிக்கையாளரை மிகவும் ஈர்த்துவிட்டது. சிங்கை அவர் நேரில் சந்திக்க வந்தபோதுதான் அவர் மாற்றுத் திறனாளி என்பதை அந்த வாடிக்கையாளர் அறிந்துகொண்டார்.

உற்பத்தி ஆற்றல் அதிகம்

சிங் மற்றும் அவரைப் போன்ற நூற்றுக் கணக்கான மாற்றுத்திறனாளிகளைத்தான் கால்சென்டர் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்த மிகவும் விரும்புகின்றன. வேலையிலிருந்து விலகிச்செல்லும் சதவீதம் மாற்றுத் திறனாளிப் பணியாளர்களிடம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

“ மற்றவர்களைவிட இவர்களிடம் வேலைசார்ந்த அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அதிகமாக இருக்கிறது” என்கிறார் இஎக்செல் சர்வீஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஸ்ருதி ஜெயின். டெல்லியில் இயங்கும் இவரது நிறுவனத்தில் 110 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றுகின்றனர்.

இன்னும் தேவை

டெல்லி பிராந்தியத்தில் இந்த ஆண்டு மேலும் மாற்றுத் திறனாளிகளைப் பணிக்கு அமர்த்த இவர்கள் முடிவெடுத்துள்ளனர். கொடுக்கல்-வாங்கல் தொடர்புடைய ஆவணப்பணிகள் மற்றும் குறியீட்டெண் பணிகளுக்காக அவர்களைப் பணிக்கு அமர்த்த உள்ளனர்.

எஸ்ஸார் நிறுவனத்தின் கிளையான ஏஜிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எஸ்எம் குப்தா, ” எங்களது பணி சார்ந்த அதிக அழுத்தம் காரணமாக சாதாரணமாக வேலையிலிருந்து விலகிப் போவோரின் சதவீதம் 40 முதல் 60 வரை இருக்கும். ஆனால், மாற்றுத் திறனாளிப் பணியாளர்களிடம் குறைவான சதவீதத்திலேயே வெளியேற்றம் உள்ளது” என்கிறார்.

ஏஜிஸ் நிறுவனத்தில் தற்போது 500 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றுகின்றனர். உலகளவில் ஏஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 1.75 சதவீதம் பேர் இந்த நிதி ஆண்டின் முடிவில் மாற்றுத் திறனாளிகளாக இருப்பார்கள்.

குறைந்த வீதத்தில் வெளியேற்றம்


ஈரோஏபிள் கால்சென்டர்தான் இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளை முழுவதுமாகக் கொண்ட நிறுவனமாக உள்ளது. இங்கே பணியாளர்கள் வெளியேறும் வீதம் 3 சதவீதமாக உள்ளது.

இந்த முயற்சியின் வெற்றியால் 90 பேரைப் பணியாளர்களாகக் கொண்ட ஈரோஏபிள் நிறுவனம் மேலும் இரண்டு நகரங்களுக்குத் தனது கிளைகளை விரிவுபடுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது.

இதைப் போன்ற அலுவலகங்களில் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கான சிறப்புத் தேவைகள் குறித்தும் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லாமல் போய்வருவதற்கான உள்கட்டுமானத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் எந்தப் பாகுபாட்டையும் எதிர்கொள்ளாத வண்ணம் மனிதவளக் கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. லிப்டுகளில் செல்ல சிறப்புப் பிடிப்பான் வசதிகள், வாஷ் ரூம் அருகிலேயே பணி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறுகிறார் குப்தா.

தமிழில்: ஷங்கர்
பிஸ்னஸ்லைன், டிசம்பர் 16

Thursday, September 11, 2014

காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்

காது கேளாதவர்களும்
செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக்கண்டுபிடித்துள்ளார்கள்
புதுக்கோட்டை மாணவர்கள்...

காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள்,
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லியமாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி.

ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு. "பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும்.

நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்" என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும்
என்கிறார்கள்.

இவர்களின் செயலை பாராட்டுவோம்...!

Tuesday, July 29, 2014

அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பெண்: போரில் காலை இழந்த வீராங்கனை

வாழ்வின் நெருக்கடிகளில் மனம் தளரக் கூடாது, தடைகளை எதிர்த்துத் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என்பன போன்ற வரிகள் பேசுவதைப் போன்று செயலுக்கு எளிதானவை அல்ல. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் துணிச்சலாக எதிர்கொண்டார்.
மெலிஸா ஸ்டாக்வெல். மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இவர், ஒரு காலை முழுவதுமாக இழந்தவர். அமெரிக்காவின் மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், விளையாட்டு வீராங்கனையும் திகழும் மெலீஸா, ஈராக் போரின் போது அமெரிக்கா சார்பில் போர் முனைக்குச் சென்றவர். லெப்டினன்ட் அதிகாரியாக பாக்தாத் நகரச் சாலையில் ராணுவக் கண்காணிப்பு வாகனங்களை வழிநடத்தியவர்.

2004-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த மெலிசாவின் இடதுகால் துண்டிக்கப்பட்டது.. இந்த வகையில் ஈராக்கில் அமெரிக்காவுக்காக தனது காலை இழந்த முதல் ராணுவ வீராங்கனை இவர்தான். இந்த இழப்பால் அவர்

Thursday, July 10, 2014

அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!


கரை தெரிகிறது... பாய்மரம்
அவிழ்க்கப்பட்ட இரண்டு
சிறு கப்பல்கள் அலைகளில் ஏறி, கடலில் மிதந்தபடி செல்கின்றன...
ஏசுநாதர், தன் சீடர்களுடன் கடைசி விருந்தில் அர்த்தம் பொதிந்த அமைதியோடு
அமர்ந்திருக்கிறார்...
விதைகளும் சதைப்பற்றும்
பளிச்சிட மஞ்சள் பூசணி
துண்டு ஒன்று தரையில்
கிடத்தப்பட்டிருக்கிறது...
அத்தனையும் தத்ரூபமான
உயிர்ப்புள்ள ஓவியங்கள்...
பேசும் ஓவியங்கள்.

இவற்றை வரைந்த அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!

சென்னை, கிண்டியில் உள்ள அம்ருதாவின் வீட்டுக்குப் போனபோது, கண்ணன், ராதையுடன் காதல் வயப்படும் காட்சியை வரைந்து கொண்டிருந்தார். நம்மை மலர்ந்து வரவேற்று, சைகையாலும் எழுதியும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அதே முறையில் பதில்களை படபடவென சொல்கிறார் அம்ருதா. ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். அப்பா பாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். அம்மா பெட்ஸி பாலன் ஹோம் மேக்கர்.

சமூக விஷயங்கள்ல ஆர்வமாக ஈடுபடறவங்க. நான் ரெண்டாவது பொண்ணு. என் கூடப் பிறந்த ரெண்டு பேரும் நார்மலாத்தான் இருக்காங்க. அம்மா, அப்பா முகம் கண்டு சிரிக்க ஆரம்பிச்ச நேரம்... ஒருநாள் வீட்டுல பாத்திரங்கள்

Monday, May 5, 2014

நம்மால் முடியாதா?

கடந்த சில காலங்களாகவே மழையின் அளவு குறைந்து கொண்டே வருவதை நாம் கவனித்து வருகிறோம்.

இதனை இந்த உலகும் நன்கு உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலைமையையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்.

இதன் காரணமாக சுமார் 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை போட்டு, அதனில் கிடைக்கும் தண்ணீரில் சில இரசாயண கலவைகளை கலந்து இன்று ஒரு கேன் தண்ணீர்  சுமார் ரூ.20லிந்து அதிகபட்சமாக ரூ.100 வரைக்கும் விற்பனை செய்வதையும் நாம் பார்த்து

Monday, April 28, 2014

விடாமுயற்சி


உங்களுக்கு அருகில் மாற்று திறனாளிகள் ஏதாவது வியாபாரம் செய்தால்,அந்த பொருளுக்கான தேவை ஏற்படும்போது அவரிடமே அந்த பொருட்களை வாங்க
பாருங்கள்...
நம்மால் அவர்களோடு "எப்போதும்" இருந்து எந்த உதவியும் கண்டிப்பாக செய்ய முடியாது...

ஆனால்,நாம் வாங்கும் பொருளில் உள்ள லாபம், கண்டிப்பாக அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில்
உதவும்...!

இளைங்கர்களே சமுக சேவைக்காக கை கோர்போம் வாருங்கள் !!

முடிந்தவரை பகிரவும்..!! எங்களுடன் இணையுங்கள்

Saturday, April 12, 2014

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தன்னம்பிக்கை நாள் கொண்டாட்டம்

11.04.2014
திருச்சி,: திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த நாளை நம்மால் முடியும் தன்னம்பிக்கை நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி ஜென்னீஸ் அகாடமி சமையல் கல்லூரியில் இலவசமாக உதவி சமையலாளர் பயிற்சி பெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்பு மற்றும் அடுக்களை மேல் அங்கி வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக பயிற்சி வழங்கி, வேலை வாங்கி கொடுக்கும் ஜென்னீஸ் அகாடமி சமையல் மேலா ண்மை கல்லூரி இயக்குனர் பொன்இளங்கோ மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டி மக்கள் சக்தி இயக்கம் சார் பில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மக்கள் சக்தி இயக்க மாநகர செயலாளர் செல்லக்குட்டி , மாவட்ட செயலாளர் இளங்கோ, அமைப்பாளர் சண்முகசுந்தரம், மாநகர அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 Thanks to

Sunday, March 30, 2014

தன்னம்பிக்கையின் மூலம் எவரெஸ்ட் சிகரம் தொட்ட மாற்றுத் திறனாளி அருணிமா

காத்மண்டு, மார்ச் 29-
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா சின்கா.

அருணிமா சின்கா (வயது 25), உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். வாலிபால் வீராங்கனையான அருணிமா, கடந்த 2011ம் ஆண்டு

Wednesday, March 12, 2014

காதலுக்கு ஊனம் ஒரு தடையல்ல

கல்லூரி மாணவி ஒருவர் 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி வாலிபரை காதலித்து வெற்றிகரமாக கரம்பிடித்துள்ளார்.

ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சிந்தன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( 26). மாற்றுத்திறனாளியான இவர் டிப்ளமோ கணனி